Saturday 29 November 2008

பிரிவில்லை

எண்ணங்கள் இணைந்திருந்தால்
ஏதுமில்லை பிரிவென்று
நினைவுகள் பிரிந்தால்தான்
நிஜமாகும் பிரிவ்ன்றோ?

உடல்களது பிரிவதனால்
உருவாகும் துன்பங்கள்
உள்ளத்து நினைவுகளால் 
உளியிடை மலையன்றோ?!

கல்லூரி கனாக்கள்

வாழ்க்கைப் படகேறி
வழிமாறிப் போனாலும்
வாழுகின்ற காலமெல்லாம்
வழித்துணையாய்க் கூடவரும்.....

நிஜங்களின் அழுத்தத்தில்
நெஞ்சிறுகிப் போனாலும்
கல்லுக்குள் ஈரமாய்க்
கசிந்திருக்கும் காலமெல்லாம்.....

ஆம்!
கல்லூரி நினைவுகளும்
கனாக்கண்ட காலங்களும்
காத்திருக்கும் உயிர்த்தீயை
வாழுகின்ற காலமெல்லாம்...

யார் நான்???தோழியா என் காதலியா!!

தோழியா என்றாய்?
தோழமையுடன் வந்தேன்
தோழமை கொள்ளவில்லை நீ!
மனைவிதானே என்றாய்|
காதலியா என்றாய்?
காதலுடன் வந்தேன்
காதலும் பண்ணவில்லை நீ!
ம்னைவிதானே என்றாய்‍‍‍‍‍‍‍_சரி
மனைவிதான் என்றேன்
மதிக்கவும் இல்லை நீ!
இஙகே பாருங்கள் 
பூமாதேவி நான்!திருமகள் நான்!
பசிதீர்க்கும் அன்னை நான்! 
மதியூகி நான்!
தாதி நான்! தாசி நான் என்றேன்
இல்லை அது
ராமன்(எம்ஜிஆர்)தேடிய சீதை(ஜெயலலிதா) 
என்றாய்!
சரி!
மனைவி என்றால் என்ன என்றேன் 
மண்ணாங்கட்டி என்றாய்!!!!.